இதோ! உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அழிக்கும் சில உணவுகள்….

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
இதோ! உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அழிக்கும் சில உணவுகள்….

சுருக்கம்

medical tips

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் அதிகமானாலே இதயத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும். இதற்கு வெளியில் வாங்கி சாப்பிடும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். கொலஸ்ட்ராலை போக்கும் சில உணவுகள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா(tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அளவோடு குடித்து வளமோடு வாழ வேண்டும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அவோகேடோ

அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருளான பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

பூண்டு

பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks