அன்னாசி பழம் இப்படி ஒரு அற்புதத்தை செய்யுமா? என்னனு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்...

 
Published : May 03, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
அன்னாசி பழம் இப்படி ஒரு அற்புதத்தை செய்யுமா? என்னனு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்...

சுருக்கம்

Medical benefits of pineapple

 

தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவும்.

அதில் எலும்புகளை வலிமையாக்க உதவும் ஓர் பழம் தான் அன்னாசி. இதற்கு அதில் உள்ள வளமான ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் தான் முக்கிய காரணம். 

அன்னாசியை பலவாறு உட்கொள்ளலாம். எப்படி உட்கொண்டாலும், அதன் முழுமையான பலனைப் பெற முடியும். இங்கு பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் அளவில் அன்னாசியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அன்னாசி

வைட்டமின் சி அன்னாசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

மாங்கனீசு அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து தான் மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் கூட்டுச்சேர்க்கைக்கு உதவி, எலும்புகளை வலிமையாக்குகிறது.

பி வைட்டமின்கள் அன்னாசியில் வைட்டமின்களான வைட்டமின் பி6, பி1 மற்றும் பி12 போன்ற எலும்புகளின் வலிமைக்கு உதவும் சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது.

காப்பர் அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய கனிமச்சத்து தான் காப்பர். இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.

புரோமிலைன் அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதி உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவேளை எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் வலியைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் இது பெரிதும் உதவியாக இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க