உங்களுக்குத் தெரியுமா? முடி உதிர்ந்த பின்னும் மீண்டும் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் உதவும்... 

First Published May 2, 2018, 1:01 PM IST
Highlights
Do you know Denny helps to increase growth


கூந்தல் பராமரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்வற்றுக்கான தீர்வுகள்:

இன்றைய பெண்களில் பலருக்கு முடி உதிர்தல், வழுக்கை, அடர்த்தி குறைவு, நீளமாக வளர்வது இல்லை, பொடுகு, நரை இவை எல்லாம் இன்றைக்கு தலையாய பிரச்சினையாக இருக்கின்றன.

இவற்றில் இருந்து நம்முடைய தலையை பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பதற்கு பாரம்பரியமான வழக்கத்தில் இருந்து வரும் அழகு சிகிச்சை முறை தான் அற்புதமான தீர்வு. தலையில் சிலருக்கு செதில் செதிலாக பொடுகு ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இவர்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.

தலை முடியின் வேர் பகுதியில் எண்ணைப்பசை இல்லாமல் வறண்டு போவதால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. 

மன அழுத்தம், வேலைப்பளு அதிகம், குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை பார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆகியோருக்கு இது போன்ற குறைபாடு இருக்கும்.

சுத்தமின்மை, மாதக்கணக்கில் தலைக்கு குளிக்காமல் இருப்பது, தரமற்ற ஷாம்பூ உபயோகிப்பது போன்ற காரணங்களால் பொடுகு வரலாம். வீட்டில் யாராவது ஒருவருக்கு இருந்தாலும் அடுத்தவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். இதன் காரணமாக தோல் கூட பாதிப்படையும், கூந்தல் வளர்ச்சிக்கும் தடை ஏற்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொடுகு வந்து விட்டது என்று தெரிந்தாலே ஈறும் பேனும் எங்கிருந்தாவது ஓடோடி வந்து தலையில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடும். இவர்கள் தங்கள் தலை முடியின் வேர்ப்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வீட்டிலேயே வைத்தியம் இருக்கிறது.

இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்புன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிக்கும் போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும்.

இது போல் வாரம் 3 நாள் செய்ய வேண்டும். இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். 

click me!