
1.. பசலைக் கீரையும் முட்டையும்
கண் பார்வைக்கு பசலைக் கீரை போதும்.
கண் பார்வை மங்காமல் இருக்க மாத்திரை வேண்டாம். மருந்து வேண்டாம், அறுவை சிகிச்சை வேண்டாம்.
அப்போ வேறென்னதான் வேணும்? வெறும் பசலைக் கீரையும், முட்டையும் போதும்.
ஆமாம். அவற்றில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இரண்டையும் எந்த வகையில் உணவாக சேர்த்தாலும் போதும். கண் பார்வை குறையவே குறையாது.
கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கலாம், டி.வி. பார்க்கலாம்
2.. பசலைக் கீரை சாறு
கணையம், ஈரல் ஆற்றலை மேம்படுத்த இயற்கை உணவுகளிலிருந்து ஒரு சாறு.
உடல் சருமத்திற்கும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் கூட இது உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.
தேவை:
3-4 பசலை கீரை இலைகள் (பாதி வேகவைத்தது)
1 டீஸ்பூன் கோதுமைப்புல் பவுடர்
1 நெல்லிக்காய்
1-3 வேப்பிலை இலைகள்
எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரை கப் தண்ணீர் சேரத்து குடிக்க வேண்டும். வேப்பிலை கசப்பை சகிக்க முடியாதவர்கள் பாகற்காயை உபயோகப்படுத்தலாம். தினமும் ஒரு ஷாட் குடிக்கலாம்.