முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனையை எளிதில் போக்கலாம்...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனையை எளிதில் போக்கலாம்...

சுருக்கம்

Medical benefits of kiddies finger flower rice

 

முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும்.

தேவையான பொருட்கள் :

முருங்கை பூ – 2 கப்,

சின்ன வெங்காயம் 50 கிராம்,

கடுகு – 1 டீஸ்பூன்,

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,

வடித்த சாதம் – 2 கப்,

மஞ்சள் தூள் – சிறதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* முருங்ககை பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வதக்கிய பின் மிளகு தூள், மஞ்சள் தூள், முருங்கை பூ, உப்பு போட்டு கிளரவும்.

* கடைசியில் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.

* இந்த முருங்கை பூ வதக்கலை வடித்த சாதத்துடன் கலந்து கிளரவும்.

* முருங்கை பூ சாதம் ரெடி.

* முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதத்தை எதிர்க்கும் திறன் உடலுக்கு கிடைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

PREV
click me!

Recommended Stories

ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!
மாரடைப்பு வராமல் தடுக்க, இந்த 9 வகை மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.!