பார்லியில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகள் இதோ…

 
Published : Jun 27, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
பார்லியில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகள் இதோ…

சுருக்கம்

Medical benefits of barley

 

மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு “வாற்கோதுமை” என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது.

பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.

பார்லி கஞ்சி

பார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும்.

பயன்கள்

கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள்.

கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து.

இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும்.

பார்லி சப்பாத்தி

பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டால் சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

பயன்கள்

இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடலாம்.

உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதற்கு இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க