
அறுகீரை
தமிழகமெங்கும் கறிக்காகப் பயிரிடப்பெரும் ஒரு கீரை வகை.
அரைக்கீரை என்ற பெயரில் தெருக்களில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை.
அறுகீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என்று பெயர் உண்டாயிற்று. இதை அரைக்கீரை என்றும் கூறுவர்.
* அறுகீரை, தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இதைப் புளியிட்டுச் சமைப்பது வழக்கம்.
* புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும்.
* காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது.
* வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவும். மூலநோய் உள்ளவர்களுக்கு ஆகாது.
* கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம்(டைபாய்டு) ஆகியவை தீரும்.
* எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலிவும் வனப்பும் உண்டாகும்.
* பிடரி வலி, சுதகச் சன்னி ஆகியவை தீரும்.