புனித மரமாக இருக்கும் அரசமரத்தின் அற்புத மருத்துவ நன்மைகள் இதோ…

Asianet News Tamil  
Published : Aug 08, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
புனித மரமாக இருக்கும் அரசமரத்தின் அற்புத மருத்துவ நன்மைகள் இதோ…

சுருக்கம்

Medical benefits of arasa maram

 

கூரிய இலைகளையுடைய பெருமரம் அரசமரம். எரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.

2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச்சூடு, சொறி, சிரங்கு, தினவு, நீர் எரிச்சல், ஆகியவை தீரும்.

3. மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் புண், சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.

4. மரப்பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊறவைத்து வடிகட்டிக் குடிக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

5. அரசு விதைத் தூள் உயிரணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டினை நீக்கும்.

6. அரசங்கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியன தீரும்.

7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

8. கொழுந்து வெப்பகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake