எந்த தோல் நோய்களையும் குணமாக்கும் சக்தி படைத்த அழிஞ்சில் மூலிகை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

 
Published : Dec 30, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
எந்த தோல் நோய்களையும் குணமாக்கும் சக்தி படைத்த அழிஞ்சில் மூலிகை பற்றி  கேள்விப்பட்டதுண்டா?

சுருக்கம்

medical benefits of alinjal

 

அழிஞ்சில்

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம், செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர்க் காடுகளிலும் வேலிகளிலும் தானே வளர்கிறது. இதில் கருப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய இன வேறுபாடு உண்டு. 

இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

நோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல், பித்த நீர்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவப் குணங்களையுடையது. 

அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுவதாயின் இடையிடையே 1 வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

வேர்ப்பட்டை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய்) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்று போக்கு ஆகியவை குணமாகும்.

இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்து பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெரும் எண்ணையை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!