மாம்பழம் எப்போதும் சிறந்தது. ஏன்?

 
Published : Mar 08, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மாம்பழம் எப்போதும் சிறந்தது. ஏன்?

சுருக்கம்

Mango is always best. Why?

மாமரம் வெப்பம் மிகுந்த பகுதிகளில் அதிகமாக வளரும். வறட்சியான நிலப் பகுதிகளிலும் கூட இது வளரும் தன்மை கொண்டது.

மா பூக்கும் காலத்திலும், மாங்காய்கள் முற்றும் காலத்திலும் கோடையில் காய்ப்பு அதிகமான பலனைத்தரும்.

மாமரம் வளருவதற்கு வண்டல் மண் ஏற்றதாயினும், களிமண் நிலத்திலும் செழிப்பாக வளரும்.

ஒன்றரை அடி ஆழத்தில் நிலத்தை தோண்டி, மூன்று தினங்கள் காயப்போட்டு, மாங்கன்றை வளர செய்யலாம். இது அகலமாகப் படர்ந்து விரிந்து வளரும் இயல்பு உடையது. பசுமையான இலைகளும் மிக அடர்ந்து காணப்படும்.

இதன் இனப்பெருக்கத்தைக் காய்ந்த கொட்டைகளின் மூலம் உருவாக்குவதல் மிக எளிது. ஒட்டு மூலமாகவும் வளரச் செய்யலாம். முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம்.

நுாற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் உள்ளன. சேலம், பெங்களூரு, மல்கோவா, நீலம் முதலியன பிரபல ரகங்கள்.

இதில் சேலம் மாம்பழம் தனித்தன்மை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் சுவை மிகுந்தது. மல்கோவா மாம்பழத்தில் நார் இல்லை. பங்கனப்பள்ளி மாம்பழம் சதைப்பகுதியை கெட்டியாகக் கொண்டுள்ளது.

மாம்பழங்களை பக்குவமாக பதப்படுத்தினால், அவற்றின் சத்துக்கள் அதிகமாகின்றன. பல நாட்களுக்கு அதை பயன்படுத்த ஏதுவாகின்றது.

நீண்ட ஆயுள், ஆண்மை விருத்தி நீடிக்கும் மா மருந்து மாம்பழம் என்றால் அது மிகையல்ல.

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க