கால் வெடிப்பை போக்க இவ்வளவு வழிகள் இருக்கு தோழரே…

 
Published : Mar 06, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
கால் வெடிப்பை போக்க இவ்வளவு வழிகள் இருக்கு தோழரே…

சுருக்கம்

There are so many ways to get rid of the outbreak of foot tolare ...

கால் வெடிப்பு, தீராத வலியைக் கொடுக்கும். சோப்பில் உள்ள ரசாயன ஒவ்வாமையால், ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

கால் வெடிப்புகள் நீக்கும் வழிகள்…

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும்.

எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறையும்.

இரவில், கை பொறுக்கும் சூட்டில், வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் இதுபோன்று செய்யவும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டுக்குள் காலணிகள் போட்டுக் கொள்வது சாலச்சிறந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள், எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை, தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

முதல் நாள், பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு, வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள், தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.
வெந்தயக் கீரையை அரைத்து, கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

மருதாணி பவுடருடன், டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து, பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது, கால் வெடிப்பை நீக்கி, உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து, வெடிப்பில் பூசி வர குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க