உங்களுக்குத் தெரியுமா? குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சிறுநீரக கல் நீங்கும்…

 
Published : May 19, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
உங்களுக்குத் தெரியுமா? குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சிறுநீரக கல் நீங்கும்…

சுருக்கம்

Lemon water cures kidney Stone

 

குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம்.

சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம்.

இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் 30 சதவீத நபர்களுக்கு சிறுநீரக நோய் வருகிறது. சிறுநீரக நோய்க்கான அறிகுறியை எளிதில் அறிய முடியாது. தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ள 100 பேரில் 60 பேரை காப்பாற்றலாம். முற்றிய நோயாளிகளை தொடர் சிகிச்சை, டயாலிசிஸ் மூலம் குணப்படுத்தலாம்.

நாளொன்றுக்கு 180 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்து, அதில் 2லிட்டரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரகத்தை பாதுகாத்தால் இதய நோய்களை கட்டுப்படுத்தலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரில் புரதச்சத்து வெளியாதல் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியாகும். ரத்தத்தில் கிரியாட்டி னின் அளவு 1.4 மி.கிராமிற்கு பதில், 1.5 மி.கிராம் இருந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சிறுநீரக நோய் வர வாய்ப்பிருக்கிறது.

எளிய பரிசோதனைகளான யூரின் அல்புமின், யூரியா, புரோட்டின் மூலம் சிறுநீரக பாதிப்பினை கண்டறியலாம்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

வெயில் காலம் என்பதால் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம். இதிலுள்ள சிட்ரேட் உப்பு சிறுநீரக கல் வருவதை தடுக்கும்.

தினம் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை சிறு நீரக மருத்துவ பரிசோதனை வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!