எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும். டிரை பண்ணி பாருங்கள்...

First Published Mar 1, 2018, 1:33 PM IST
Highlights
Lemon juice drinks boiled water so you get so much benefits. Check out ...


எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எலுமிச்சைப் பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய தோலில் கூட அதிக நன்மைகள் உள்ளது.

எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது. 

எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

* நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுத்து, நமது உடம்பிற்கு போதுமான ஆற்றலை கொடுத்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.

* நமது உடலின் மெட்டாலிசத்தை சீராக்கி, செரிமானம் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நமது உடம்பின் pH அளவை நிலைப்படுத்துகிறது.

* தினமும் காலையில் இந்த எலுமிச்சை நீரைக் குடித்து வருவதால், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.

* உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், தொடர்ந்து காலையில் குடித்து வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைத்து, விரைவில் உடல் எடையைக் குறைக்கிறது.

* மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, எலுமிச்சை பழத்தினை வேகவைத்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் போதும். மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

குறிப்பு

எலுமிச்சை பழம் போட்டு வேகவைத்த நீரை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை. குளிரவைத்துக் குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
 

click me!