
காலை ஒரு புதிய நாளின் ஆரம்பம் உங்களது காலை பழக்கங்களான யோகா, உடற்பயிற்சி செய்வதற்கு முன் முதலில் ஒரு கிளாஸ் சீரகம் தண்ணீர் அல்லது பெருஞ்சீரகம் தண்ணீர் போன்ற ஆரோக்கியமான பானத்துடன் உங்களது நாளை தொடங்குங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானங்களை குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த பானங்கள் செரிமானத்தை மேம்படுத்துவது முதல் எடை இழுப்பு செயல்முறை துரிதப்படுத்துவது வரை பல்வேறு வழிகளில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சரி இப்போது கேள்வி என்னவென்றால், சீரகத் தண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் இவை இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது? நாளின் ஆரம்பத்தை எதனுடன் தொடங்குவது நல்லது? இந்த கேள்விக்கான பதில்கள் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சீரக நீர் அல்லது பெருஞ்சீரகநீர்: எது சிறந்தது?
இந்த இரண்டு மசாலா பொருட்களும் செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும் இவை பல காலமாகவே மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை இரவு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலை குடிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த இரண்டு பானங்களில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தெரியுமா?
சீரக நீர்
சீரக நீரானது செரிமானத்தை தூண்டுவதற்கும், செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று உப்புசத்தை எதிர்த்து போராடுவதற்கும் சிறந்து விளங்குகிறது. கூடுதலாக, இந்த பானம் உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரித்தும் உதவுகிறது. மேலும் ரத்த உறைவு அபாயத்தை குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை இந்த பானம் வழங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக பெருஞ்சீரக தண்ணீருடன் ஒப்பிடும்போது சீரக தண்ணீரானது வயதானவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
பெருஞ்சீரக நீர்
மறுபுறம் பெருஞ்சீரக நீர் அதன் குளிர்ச்சி மற்றும் இனிமையான பண்புகளுக்காக அறியப்படுகிறது. இந்த பானம் குடல் ஆரோக்கியத்திற்கு மேம்படுத்த உதவுகிறது. மேலும் பசியை குறைத்து வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்துவதில் உள்ள எடை இழப்புக்கு உதவுக்கூடும். எனவே எடையை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு இந்த வானம் மிகவும் நன்மை பயக்கும். பெருஞ்சீரகத்தில் இருக்கும் பண்புகள் செரிமான அசெளகரியத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த குடல் நல்வாழ்வையும் ஆதரிக்கும். எனவே பலருக்கும் இது ஒரு விருப்பமான பானமாக அமைகிறது. இருப்பினும் இந்த பானத்தை கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
எது சிறந்தது?
காலை நேரத்தில் சீராக தண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் இவை இரண்டில் எது குடிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம் மற்றும் உடல் தேவைகளை பொறுத்தது. உங்களுக்கு அஜீரண பிரச்சனை இருந்தாலோ, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் சீரக தண்ணீர் குடிப்பது தான் நல்லது. அதுவே உங்களுக்கு வாய் தொல்லை அல்லது மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் சோம்பு நீர் சிறந்த தீர்வு. ஒருவேளை நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இந்த இரண்டு பானங்களையும் குடிக்கலாம். இந்த இரண்டு பானங்களையும் மாறி மாறி அல்லது இரண்டையும் சேர்த்து கூட குடிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஒத்துக் கொள்ளாது. எனவே உங்களது உடலுக்கு எது தேவை என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
குறிப்பு ; நீங்கள் ஏதேனும் உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசித்த பிறகே இந்த பானங்களை குடிப்பதுதான் நல்லது.