நன்மையும் தரும், தீமையும் தரும் அதுதான் பரங்கிக்காய்…

First Published May 1, 2017, 1:03 PM IST
Highlights
It is good that gives good and evil ...


பரங்கிக்காயில் என்ன செய்யும்?

வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு.

குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும்.

பித்தம் போகும்.

பசியைத் தூண்டும்.

சிறுநீர் பெருகும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.

பரங்கிக்காயின் தீமைகள்

உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.

இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும்.

வாத குணம் உள்ளது.

பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

click me!