
எப்படி பல் துலக்கனும்?
தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்கனும்.
சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர் அப்படி செய்யக் கூடாது.
சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இதுவும் தவறு.
அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது.
மிதமான அழுத்தம் கொடுத்து குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும்.
ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும்.
பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.