பாதாம் பருப்பை தோல் உரித்து சாப்பிடுவது தான் சிறந்தது. அதே சமயம், இந்த பாதாம் பருப்பின் தோலைப் பயன்படுத்தி, சருமத்தையும் கூந்தல் அழகையும் எப்படி பராமரிக்கலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.
நட்ஸ் வகைகள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. யாராக இருந்தாலும், நட்ஸ் வகைகளை அதிகமாக விரும்பி உண்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்தை அளிப்பதிலும் நட்ஸ் வகைகள் சிறந்தவை தான். ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் பாதாம் பருப்பும் ஒன்றாகும். இதில் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களுமே அடங்கியுள்ளது. ஆனாலும் இந்த பாதாம் பருப்பை தோல் உரித்து சாப்பிடுவது தான் சிறந்தது. அதே சமயம், இந்த பாதாம் பருப்பின் தோலைப் பயன்படுத்தி, சருமத்தையும் கூந்தல் அழகையும் எப்படி பராமரிக்கலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.
தலைமுடியை வலுவாக்கும் பாதாம் தோல்
undefined
பாதாம் பருப்பின் தோலைப் பயன்படுத்தி, தலைமுடியை வலுப்படுத்த முடியும். தேன், முட்டை மற்றும் கற்றாழை ஜெல்லுடன் பாதாம் பருப்பின் தோலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கூந்தலில் தடவி பிறகு, கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், கூந்தலை மிகவும் மென்மையாக அலசி எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் தலைமுடி வலுவடைந்து, முடி உதிர்வைத் தடுக்கும்.
நன்மையையும் சுவையையும் அள்ளித்தரும் ப்ரக்கோலி கிரேவியை ஈஸியாக செய்யலாமா!
பாதாம் பருப்பின் தோல்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கூந்தலை அழுக்கு நீங்க நன்றாக அலசிய பின்னர், அடுத்த நாள் தலையில் எண்ணெய் வைக்காமல், பாதாம் பருப்பின் தோலை அரைத்து, கூந்தலில் தடவி வேண்டும். அதிலும் குறிப்பாக உச்சந்தலையில் தொடர்ந்து தடவி வந்தால் பேன் பிரச்சனை விரைவிலேயே நீங்கி விடும். கூந்தலில் வறட்சியும் இருக்காது. தலைமுடியும் மென்மையாக மாறும்.
சருமப் பாதுகாப்பிற்கு பாதாம் தோல்
முகத்திற்கு பேஸ்பேக் போடும் போது, அதில் பாதாம் பருப்பின் தோலை சேர்த்துப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு ஊட்டமளித்து பாதுகாக்கும். அதோடு, சருமத்தை நீரிழப்பிலிருந்தும் தடுக்க உதவும்.
பாதாம் பருப்பின் தோலை இலேசாக நீர் விட்டு அரைத்துகீ கொள்ள வேண்டும். உடலில் எங்கெல்லாம் சருமப் பிரச்சனை உள்ளதோ, அங்கெல்லாம் இதனை தடவ வேண்டும். அதாவது புண்கள் மற்றும் பருக்கள் இருக்கும் இடங்களில் தடவலாம். சில நாட்களிலேயே சரும பாதிப்புகள் தீர்ந்து, சருமம் பொலிவடையும். பாதாம் கொட்டைகளையும் சிறிதளவு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம்