தினசரி அசைவம் சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது அதிகமா? கெட்டது அதிகமா? ஒரு அலசல்...

Asianet News Tamil  
Published : Apr 26, 2018, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
தினசரி அசைவம் சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது அதிகமா? கெட்டது அதிகமா? ஒரு அலசல்...

சுருக்கம்

Is it good for your body to eat daily mushrooms? Is it bad? A paragraph ...

இன்றைய காலகட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பிரியாணி கடைகள், மிலிட்டரி ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள். கிரில்டு சிக்கனும், மட்டன் கோலாவும், ஃபிங்கர் ஃபிஷ்ஷும் என விதவிதமான நாக்கில் எச்சில் வரவழைக்கும் அசைவ உணவுகள். 

ரோட்டுக் கடை பரோட்டா பாயா முதல் கண்கவர் அழகிய ரெஸ்டாரண்ட் வரைக்கும் அசைவ விரூம்பிகளின் படையெடுப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி அன்றாடம் அசைவ உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா… தினமும் அசைவம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

அசைவத்தின் வகைகள்

அசைவம் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஆங்கிலத்தில், `ரெட் மீட்’, `வொயிட் மீட்’ என்பார்கள். ரெட் என்பது சமைப்பதற்கு முன்னர் சிவப்பு நிறத்திலும், சமைத்த பின்னர் பழுப்பு நிறத்திலும் இருக்கும் இறைச்சிகள். ஆடு, மாடு, பன்றி இறைச்சியை, `ரெட் மீட்’ என்பார்கள். 

சமைக்கும் முன்னரும், சமைத்த பின்னரும் வெளிறிய நிறத்தில் இருக்கும் இறைச்சியை, `வொயிட் மீட்’ என்பார்கள். மீன், கோழி, இறால், நண்டு போன்றவை `வொயிட் மீட்’ வகையைச் சேர்ந்தது.

என்ன வித்தியாசம்?

ரெட் மீட்டில், `மயோகுளோபின்’ (Myoglobin) எனும் செல்கள் அதிகமாக இருக்கும். ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை தசைப்பகுதிக்குக் கொண்டு செல்வதில் இந்த மயோகுலோபின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

இப்படி ஆக்சிஜன் அதிகம் பெற்று, தசைகள் அதிக இயக்கம் பெறுவதால், இதன் தசைகள் சிவப்பு நிறத்துக்கு மாறுகின்றன. மேலும், ரெட் மீட், வொயிட் மீட் இரண்டின் கொழுப்பு விகிதத்திலும் வித்தியாசங்கள் உள்ளன. 

வொயிட் மீட்டில் குறைந்த அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ரெட் மீட்டில் கொழுப்புச்சத்து அதிகம் என்றாலும், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளன. 

ரெட் மீட்டில் உள்ள இரும்புச்சத்தை, `ஹீமீ இரும்புச்சத்து’ (Heme iron) என்பார்கள். இது தாவரங்களில் இருந்து பெறப்படும் இரும்புச் சத்தைவிட வேகமாக உடலால் கிரகிக்கப்படும்.

தினமும் அசைவம் சாப்பிடுவதால் நல்லது அதிகமா? கெட்டது அதிகமா?

நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும்போதும் நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்கிறது. 

தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான் தலைவாசல்.

அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கும் கொழுப்பைக் கல்லீரல்தான் சேமித்து, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுகிறது. இப்படிக் கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்துகொண்டே போகும்போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.

அசைவ உணவுகளைப் பொரித்துச் சாப்பிடுவது இன்னமும் மோசமானது. ஹோட்டல்களிலும், ரெஸ்டாரன்ட்களிலும் உள்ள அசைவ உணவுகளில் பதப்படுத்துவதற்காக நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. 

இதை உயர் வெப்பநிலையில் சமைக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் (Carcinogenic) வெளிப்படுகின்றன. இந்த கார்சினோஜீன் உடலில் சேரும்போது, புற்றுநோயை ஏற்படுத்துகிறது. 

ப்ராஸ்டேட், மலக்குடல்வாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். சமைத்த எண்ணெயையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் பிரதானமானது. எனவே, ஹோட்டல்களில் பொரித்த அசைவ உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

தினசரி அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இந்தப் புரதத்தை நீக்கவேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள் பழுதாகி, முழுமையாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

அசைவ உணவுகளில் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளதால், நமது பாலியல் சுரப்பைத் தூண்டித், தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பிராய்லர் கோழிகளுக்கு அவற்றின் வேகமான வளர்ச்சிக்காகவும் அதிகக் கறிக்காகவும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறது. 

பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி இயக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் இது. பெண்கள் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடும்போது அவர்கள் உடலில் அளவுக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சேர்கிறது. 

இதனால், மிக இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள், பி.சி.ஓ.எஸ் பிரச்னைகள், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake