இந்தப் பழத்தைப் பயன்படுத்தினால் வியர்வை நாற்றத்தை விரட்டலாம்...

First Published Jan 2, 2017, 2:26 PM IST
Highlights


வியர்வை நாற்றம் எல்லாருக்கும் வருவது தான். அதற்கு சுற்றுப்புறமும் நம் உணவுப்பழக்கமும் தான் காரணம்.  

ஆரோக்கியமான இயற்கை சூழலில் தினமும் இரு முறை குளித்துவிட்டு பழங்கள் பயிர்கள் போன்ற உணவுவகைகளை உண்டு வாழ்பவர்களுக்கு எந்த வித வாடையும் உடலில் அடிக்காது.

விவசாயிகள் எல்லாம் வயலில் வியர்க்க வியர்க்க வேலை செய்வார்கள் பின்னர் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து விட்டு அவர்கள் கொண்டு வந்த கஞ்சித்தண்ணீரை குடிப்பார்கள்.  இதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் உள்ளார்கள்.

நமது நகர வாழ்க்கையில் இது சாத்தியமற்றது.  எங்கும் புகை மாசு சுகாதாரமற்ற காற்று, நீர் என அனைத்தும் மாசடைந்து தான் கிடைக்கின்றது.  மினரல் வாட்டர் பாட்டிலை சிறிது நேரம் வெளியில் வைத்தால் அதன் மேல் அழுக்குப் படலம் ஒட்டிவிடுகின்றது.

வியர்வை எல்லாருக்கும் வருவது தான்.  நம் உடலில் இருக்கும் வேண்டாத கெட்ட நீர்கள் மற்றும் தாதுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வருகின்றது.  நாம் உண்ணும் உணவைப்பொறுத்து வியர்வை நாற்றம் இருக்கும்.  

பெண்களை விட ஆண்களுக்கு அதிக வியர்வை வாடை வரும் அதன் காரணம் ஹார்மோன்கள், மேலும் பெண்கள் அழகுக்கு மட்டும் பூக்கள் வைப்பதில்லை. அவர்களின் மீது வாசனை தரவும் பயன்படுகின்றது.  

சாதரணமாக சைவ சாப்பாடு மற்றும் கோதுமை வகை உணவுகள், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு எந்த வாடையும் வியர்வையில் அடிக்காது.  ஆனால் அசைவ உணவு வகைகளான ஆடு, கோழி, முட்டை மற்றும் மைதாமாவினால் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் (புரோட்டா) போன்றவைகளை உண்டால் வியர்வையில் அதிக அளவு கழிவுகள் வெளியேற்றப்படும்.  இதனால் நாற்றம் அடிக்கும்.

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக மூன்று முறை குளிக்க வேண்டும். இவர்கள் எந்நேரமும் பெர்பியூம்கள் பயன்படுத்தியே தீரவேண்டும்.

இந்த வியர்வையை நிறுத்தினால் உடல் பாதிக்கும் ஆனால் வியர்வை வாடையில்லாமல் செய்யலாம்.  என்ன தான் விலையுயர்ந்த சிங்கப்பூர் சென்டே இருந்தாலும் 3 மணிநேரம் தான் அப்புறம் வியர்வையோடு கலந்து அது ஒரு வாடையாகிவிடும்.  சிலருக்கு தோல் புற்று நோய் வந்துவிடும்.  அலர்ஜியை உண்டாக்கும்.

இதை தவிர்க்க முழு எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்தெடுக்க வேண்டும் பின்னர் அந்த தோலை நாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு அலசிவிட வேண்டும்.  பின்னர் நாம் குளித்தப்பின்பு துவட்டாமல் பிழிந்தெடுத்த சாற்றில் சிறிது தண்ணீர் விட்டு அலசிவிட்டு அதை மேனியில் தேய்த்துவிடவும்.

இனி நாள் முழுக்க பிரஷ்னஸ் தான்.  அதேசமயம் தோலில் உள்ள தேமல்கள் புண்கள் கொப்புளங்கள் முகப்பருக்கல் மீது படும் போது சற்று எரிச்சலைக் கொடுத்தாலும் அவைகளும் நீங்கிவிடும்.

இதனை தினமும் செய்து வாருங்கள் எலுமிச்சை சாறு தினமும் கிடைக்க வில்லையென்றால் அதன் தோலை தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.

click me!