பற்களில் ஏற்பட்ட காறையை போக்க 4 டிப்ஸ்…

First Published Jan 2, 2017, 2:24 PM IST
Highlights


தினமும் புகைபிடித்தல் மட்டும் போதை தரும் பாக்கு முதலியவைகள் பற்களில் காரையை உண்டாக்குகின்றது.  தினமும் ஸ்ட்ராங்கான டீயை குடிப்பவர்களுக்கு பற்களின் உட்புறம் காறையை உண்டாக்கி மஞ்சள் தன்மையை கொடுத்துவிடும்.

இவற்றை நீக்க சில குறிப்புகள்:

1. தேநீர் சாப்பிட்டு பின் பல் துலக்கினால் நல்லது.

2. வீட்டு சாம்பல் அல்லது திருநீரில் பல்லை தேய்ந்தால் பல் பளிச்சிடும்.

3. சிறு வயதில் உருவான காறையை போக்க எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதில் உப்பை நன்கு பொடித்து போடவும். பின் அதை பிரஷ்ஷில் தொட்டு துலக்கவும்.  இதை தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்தாலே பல்லில் உள்ள எந்தவொரு காறையையும் நீக்கி பற்களை பளிச்சிட செய்யும்.

ஆனால் தினமும் செய்யும் போது ஈறுகளை அதிகமாக அழுத்தாமல் மென்மையாக தேய்க்கவும்.  இல்லையெனில் புண்கள் ஏற்பட்டுவிடும்.

4. கரும்பை பற்களால் கடித்து நன்றாக மென்று சாப்பிடவும். கரும்புச்சாறு காறையை நீக்கிவிடும்.

click me!