
ஔரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால் கருகரு முடியோடு கலக்கலாம்.
ஔரி சாயம் தயாரிக்கும் முறை
தேவையானவை:
ஔரி இலை - 50 கிராம்,
மருதாணி இலை - 50 கிராம்,
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை.
செய்முறை
இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து ஔரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும்.
இதை பத்திரப்படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்