காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவு எடுத்தால் நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும்…

 
Published : Mar 08, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவு எடுத்தால் நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும்…

சுருக்கம்

If you take any kind of food in the morning to get energy for the whole day ...

இரவு உணவுக்கு பின்னால் தூங்கிவிடுகிறோம். காலையில் விடிந்ததும் உடலுக்கும், மனதுக்கும் சக்தியும் உற்சாகமும் தேவை. அதற்காக காலை உணவை கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும்.

அதில் போதுமான அளவு சத்துக்களும் இருக்கவேண்டும். காலை உணவு மனதுக்கு உற்சாகத்தை தரும் என்பதால் அதனை ‘மூளைக்கான உணவு’ என்று கூறுகிறோம்.

* தவிடு நீக்காத தானியங்கள், பருப்பு - பயறு வகைகள், ஓட்ஸ் போன்றவைகள் அடங்கிய உணவுகள் சிறந்தவை. இந்த வகை உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு உயராது. உடலில் குளுக்கோஸ் அளவில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தால் அது மன நிலையை ஓரளவு பாதிக்கும்.

* சிறுவர், சிறுமியர்களுக்கு உற்சாகம் கிடைக்க ‘ஓமேகா 3 பாற்றி ஆசிட்’ கலந்த உணவுகளை அவர்களுக்கு வழங்கவேண்டும். சில வகை மீன்களிலும், பாதாம், ஆலிவ் ஆயில் போன்றவைகளில் மேற்கண்ட சத்து இருக்கிறது.

* மன ஆரோக்கியத்திற்கு ‘வைட்டமின் - பி’ சத்துள்ள உணவுகள் அவசியம்.

* கீரை, பீன்ஸ் வகைகள், முளைவிட்ட தானியங்களில் இந்த சத்து அதிகம் இருக்கிறது.

* முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டு வரவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க