கண்களில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரிசெய்யாவிட்டால் கண்பார்வையே கூட பறிபோகும்...

Asianet News Tamil  
Published : Apr 13, 2018, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
கண்களில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரிசெய்யாவிட்டால் கண்பார்வையே கூட பறிபோகும்...

சுருக்கம்

If you do not fix these problems in your eyes you will lose your eyes ..

1. கண் எரிச்சல் நீங்க:

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு, சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளிபெறும்.

2. கண் பிரகாசம் அடைய:

தூது வளைகாயை ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெறும்.

3. கண் வலி குணமாக:

ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வந்தால் குணமாகும்.

4. கண் நோய் நீங்க:

அன்னாசிப்பழம் சாப்பிட கண்நோய் குணமாகும்.

5. கண்வலி வராமல் தடுக்க:

எள் செடிய்யின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.

6. கண்கள் குளிர்ச்சியடைய:

கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.

7. கண்புரை குணமாக:

கீழாநெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணீல் விட்டு வர கண்புரை குணமாகும்.

8. கண்பார்வை தெளிவு பெற:

அத்திமரத்தின் பூவில் சாறெடுத்து தினசரி 2 வேளை வீதம் 3 நாள் வரை கண்ணுக்குள் விட கண் பார்வை தெளிவு பெறும்.
 

PREV
click me!

Recommended Stories

இனி ஒரு பரு கூட வராது! இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க போதும்
தினமும் ஒரு கப் கிரீன் டீ… உடம்பில் நடக்கும் அதிசயம்.!!