குறட்டை விடுவதால் மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறீர்களா? இந்த பானத்தை குடித்தால் குறட்டை வராது...

First Published Apr 13, 2018, 12:28 PM IST
Highlights
Do you make angry your wife Drinking this drink will cure your snore...


குறட்டை 

குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபட ஓர் அற்புதமான பானம் ஒன்று உள்ளது. அதை இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை நீங்கும்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 2

எலுமிச்சை – 1/4

கேரட் – 2

இஞ்சி – 1 துண்டு

தண்ணீர் – 1/2 கப்

பானம் செய்யும் முறை

செய்யும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தால், குறட்டையைத் தடுக்கும் பானம் தயார்.

இந்த பானம் தயாரிக்கப் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள், தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும். மேலும் இந்த பானத்தைப் பருகும் காலங்களில், ஒருசில உணவுகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை நிலைமையை மோசமாக்கும்.

தவிர்க்க வேண்டியவைகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள்

* எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

* எளிதில் செரிமானமாகாத உணவுகள்

* அதிகப்படியான சாக்லேட்

* அளவுக்கு அதிகமான ஆல்கஹால்
 

click me!