உங்கள் சமையலில் ஆயிலைக் குறைத்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…

 
Published : Jun 12, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
உங்கள் சமையலில் ஆயிலைக் குறைத்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…

சுருக்கம்

If you decrease your oil you can live long

 

இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் சுத்தமற்ற எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான்.

நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.

சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது.

அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படும்.

அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படும்.

பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை 15 – 20 மி.லி., வரை பயன்படுத்தலாம்.

திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும்.

உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.

வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி – 20 மி.லி போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.

10 மி.லி. எண்ணெய் 90 கலோரி,

ஒரு சாதா தோசை 80 கலோரி,

ஒரு பூரி 260 கலோரி,

வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250 கலோரி,

ஒரு பிளேட் பிரியாணியில் 1600 கலோரிகள் உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Weight Loss Tips : என்ன செஞ்சாலும் உடல் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த 4 விஷயங்களை மாத்தி பாருங்க 'உடனடி' பலன்!!
கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?