காலையில் சிறந்த உணவு இட்லி…

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
காலையில் சிறந்த உணவு இட்லி…

சுருக்கம்

காலையில் எல்லோருக்கும், அவசர அவசரமாக கிளம்பி வேலைக்கு போகும் போது சூடாக வீட்டில் பெண்கள் சமைத்து தரும் இட்லி மற்றும் தோசையை தள்ளிவிட்டு,  ஒரு கப் டீயை மடக் மடக் என்று குடித்துவிட்டு, ஆபிஸ் கேண்டினில் ஒரு செட் பூரியை காசு கொடுத்து நாக்கை சுழட்டி சுழட்டி சாப்பிடுபவர்களா நீங்கள்.?

ஆமாம் என்றால் தயவு செய்து இனிமேல் அப்படி செய்யாதீர்கள். நம் வீட்டில் தயாரிக்கும் இட்லி, தோசையில் உள்ள சத்துக்கள் தெரிந்தால் இப்படி செய்யமாட்டீர்கள்.  இட்லி என்பது நீராவியில் சமைக்கக் கூடிய ஒரு பதார்த்தம் தோசை என்பது சுட்டக்கல்லில் வறுக்கப்பட்ட ஒரு பதார்த்தம். இவையிரண்டிலும் கார்போஹைட்ரேட் மிகுந்து காணப்படுகின்றது.

இந்த கார்போஹைட்ரேட் மிகவும் நன்மையானது நமது உடலுக்கு.  இது உடலுக்கு சென்று உச்சி முதல் பாதம் வரை சக்தியை தருகின்றது. இதில் கொழுப்புகள் கிடையாது கலோரிகள் குறைவு. மேலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்யும் தேங்காய் சட்னி, வயிற்றுக்கு நல்லது வயிற்றில் உள்ள புண்களை ஆற வைத்துவிடும்.

காலையில் எண்ணெய்ப்பொருட்கள் (பூரி) உடலுக்கு சேரவிடக்கூடாது. இந்த எண்ணெய்ப்பொருட்கள் நம் இரைப்பையை அடைந்து அன்றைய நாள் முழுவதும் உணவு செரிமானத்தை மந்தப்படுத்திக்கொண்டே இருக்கும்.  இந்த மைதா மாவு அதைவிட மோசமானது. இது நீரிழிவு நோய்க்கு காரணி.

வடநாட்டில் காலையில் சப்பாத்தி சாப்பிடுவார்கள். அங்கே கோதுமை சல்லிசாக கிடைக்கும். நம் பகுதிகளில் அரிசி விலைகுறைவாக கிடைக்கின்றது.  இந்த அரிசியில் செய்த இட்லி  பதார்த்தங்களையும் தோசைகளையும் இனிமேல் வீட்டில் தவிர்க்காதீர்கள்.

கொழுப்புச்சத்து நிறைந்த பூரி மற்றும் பரோட்டாவை விட, நம் வீட்டில் செய்யப்படும் இட்லி உடலுக்கு நல்லது மட்டுமல்ல நம் வீட்டாரின் அன்பினால் நமக்காக செய்யப்பட்டது. அதைச்சாப்பிடாமல், அவர்களையும் மனசங்கடத்தில் ஆழ்த்திவிட்டு நம் உடலையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake