தலைச்சுற்றல் எதனாலெல்லாம் வருகிறது? வந்தால் என்ன பண்ணலாம்…

Asianet News Tamil  
Published : May 16, 2017, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
தலைச்சுற்றல் எதனாலெல்லாம் வருகிறது? வந்தால் என்ன பண்ணலாம்…

சுருக்கம்

How to solve giddiness

 

தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி.

உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை காட்டும் ஓர் அறிகுறியே தலைச்சுற்றல்.

உடலுக்கு பிடிக்காத, உடல் ஏற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். தலைச்சுற்றலின் போது சுயநினைவு இருக்கும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியும்.

சுயநினையை இழப்பது மயக்கம். தலைச்சுற்றல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பெண்களுக்கு முதல் கர்ப்பத்தின் போது தலைச்சுற்றல் வருவது இயற்கையே.

வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடாவிட்டாலும் தலைச்சுற்றல் வரும்.

ரத்தத்தில் போதிய அளவு இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு குறைந்தாலும் தலைச்சுற்றல் வரும். இதை ஹைப்போக்ளை சிமியா என்பார்கள். இந்த தலைச்சுற்றலுக்கு 2 ஸ்பூன் சர்க்கரையை தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துவிட்டால் உடனே தலைச்சுற்றல் நின்று விடும்.

உள்காதில் பிரச்சனை இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. மனிதன் ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் நேராக நடப்பதற்கு உதவுவது உட்காதிலுள்ள உறுப்புகள் தான்.

அதே போல் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைச்சுற்றல் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் தலைச்சுற்றல் ஏற்படும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இதை உணர்ந்து கொள்ளலாம். இந்த மாதிரி நேரத்தில் எந்த இடத்தில் என்ன வேலை செய்கிறீர்களோ அதை கொஞ்சம் நிறுத்திவிட வேண்டும். மின்விசிறிக்கு அடியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும். ஜூஸ், காபி போன்ற ஏதாவது ஒன்றை கொஞ்சம் குடிக்கலாம். படுப்பதற்கு வசதி இருந்தால் கொஞ்ச நேரம் படுக்கவும். தலைச்சுற்றல் சரியாகி விடும்.

அதிர்ச்சியான தகவலை கேட்டவுடன் சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படலாம். அவர்கள் உடனே முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு காற்றோட்டமான இடத்தில் உட்கார்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாலே போதும்.

பெண்களில் சிலருக்கு ரத்த சோகை இருக்கும். அவர்களுக்கு உடல் பலவீனமாகவும், அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படும். டாக்டரை பார்த்து ரத்த சோகைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்.  பெண்களை பொறுத்தவரை ரத்த சோகையினால் தலைச்சுற்றல் வருகிறதா அல்லது கர்ப்பத்தினால் தலைச்சுற்றல் வருகிறதா என்பதை கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு காரணங்களும் இல்லாமல் தலைச்சுற்றல் வந்தால் சிகிச்சை பெறுவது நல்லது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake