
1.. கூந்தல் பளபளப்புடன் இருக்க
** கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
** சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
** சிறிது சாதம் வடித்த கஞ்சியில், ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.
** கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.
அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும்.
** வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
இளநரை நீங்க
** நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வேம்பாளம் பட்டை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
** நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.
** கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
** சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.
பொடுகு நீங்க
** வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
** பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.