
வெயில் காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பு:
வியர்வை சுரப்பிகள் அடைபடும் பொழுது திட்டு, திட்டாக, சிறு சிறு கட்டிகளாக கிருமி பாதிப்பினால் தலை வெள்ளையாக இருக்கும். கழுத்து, மேல் நெஞ்சு, சரும மடிப்புகள், மார்பகம், கீழே எனக் காணப்படும். பொதுவில் நல்ல காற்றுபடும் பொழுது இரண்டு நாளில் இவை தானே மறைந்துவிடும்.
அதிக வெயிலில் இல்லாமல் இருப்பதும், உடல் இறுகும் துணிகளை அணியாது இருப்பதும், அடர்த்தி அதிகமான லோஷன்களை உபயோகிக்காமல் இருப்பதும் இந்த பாதிப்பினை தவிர்க்கும்.
ஈரமின்றி, வியர்வையின்றி சருமத்தினை காக்கவும். பூஞ்ஞை பாதிப்புகள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. அலர்ஜி பாதிப்புகளும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.
கோடையில் மற்றும் அதிகமாக பாதிப்பு ஏற்படுத்துவது ஜலதோஷம் (அ) சளி மற்றும் ப்ளூ ஜுரம். இது சளியா அல்லது ஜுரமா என்றே பலருக்குத் தெரிவதில்லை. இரண்டுமே வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புத்தான். இரண்டுமே சுவாசப் பாதையில் ஏற்படுத்தும் பாதிப்புதான். இரண்டுமே மக்களை வாட்டி எடுத்து விடும்.
ப்ளூ ஜுரம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஒன்று. சாதாரண சளித்தொல்லைக்கு வைட்டமின் சி, இஞ்சி, தேவையான அளவு நீர், ஓய்வு இவை மூலம் தீர்வு காணலாம்.
அம்மை நோய் பிரிவுகளும் இந்த கோடை காலத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுவதுண்டு.
வைரஸ் பாதிப்பான இது எளிதில் மற்றவர்களுக்கு பரவும் என்பதால் பாதிப்புடையோர் தனித்து இருப்பதே நல்லது.