முடி உதிர்வை தடுக்க இப்படி ஒரு கிரீம் இருக்கு. தெரியுமா? நீங்களே கூட தயாரிக்கலாம்...

Asianet News Tamil  
Published : Feb 03, 2018, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
முடி உதிர்வை தடுக்க இப்படி ஒரு கிரீம் இருக்கு. தெரியுமா? நீங்களே கூட தயாரிக்கலாம்...

சுருக்கம்

How to control hair fall

 

முடி உதிர்வை தடுக்க உதவும் கிரீம் "சல்ஃபர் கிரீம்"

எல்லாருக்குமே ஒரு நாளையில் 50 – 100 முடி கற்றைகள் குறைவதுண்டு இதற்கு காரணம் நமது கூந்தலில் வளர்ச்சி நிலையை மூன்று விதமாக பிர்க்கலாம்.

முதல் நிலையில் கூந்தல் வளர்ச்சி அடைவது. இது நீண்ட மாத வளர்ச்சி, குறைந்தது 7 ஆண்டுகள் வரை இந்த வளர்ச்சி தொடர்ந்தபடி இருக்கும். அடுத்து இரண்டாவது நிலை, இந்த சமயத்தில் கூந்தல் உதிரும். சுமார் 10 நாட்கள் வரை இது இருக்கும். 

அடுத்து மூன்றாவது நிலை. இந்த நிலையில் முடி உதிர்தல் நடைபெற்றதால், முடியின் வளர்ச்சி தற்காலிகமாக நிற்கும். குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரை வளச்சி இருக்காமல் இருக்கும். இப்படி ஒரு சுழற்சியில்தான் கூந்த வளர்ச்சியானது உருவாகும், உதிரும். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் உருவாகும்.

சாதரணமாக கூந்தல் உதிர்வது இயற்கைதான். ஆனால் கொத்து கொத்தாய் முடி உதிர்ந்தால் கவலைப்பட வேண்டிய விஷயம்தான். கூந்தல் வளர சல்ஃபர் முக்கியம். ஏனெனில் முடிகள் கரட்டின் என்ற புரதத்தால் ஆனது. இந்த புரத உற்பத்தியை அதிகமாக சல்ஃபர் கொண்டுள்ளது. சல்ஃபர், கெரட்டின் உற்பத்தியை தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

அவ்வாறு கூந்தல் வளர்ச்சியை தூண்டும் சல்ஃபரைக் கொண்டு ஒரு எண்ணெயை தயாரிக்கலாம். எப்படி செய்வது என தெரிய இன்னும் கொஞ்சம் விரிவாக படியுங்கள்.

தேவையானவை : 

சல்ஃபர் – 1 டீஸ்பூன் ஜுஜுபா எண்ணெய் – அரை கப் புதினா எண்ணெய் – 4-5 துளிகள் ரோஸ்மெரி எண்ணெய் – 4-5 துளிகள்.

செய்முறை

முதலில் ஜுஜுபா எண்ணெயில் புதினா மற்றும் ரோஸ்மெரி எண்ணெய்களை கலந்து, அதில் சல்ஃபரை போட்டு நன்றாக கலக்குங்கள். இதனை இரு நாட்களுக்கு சாதரண அறையின் வெப்பத்தி வைத்திடுங்கள். 

பின்னர் அதனை உபயோகிக்கலாம். முதலில் உங்களுக்கு சரும அலர்ஜி அல்லது சல்ஃபர் ஒத்துக் கொள்கிறாத என பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். சிறிது எடுத்து, கைகளில் தடவி ஏதேனும் எரிச்சல் அரிப்பு இருக்கிறதா என பார்த்து, பின்னர் தொடரலாம்.

இந்த எண்ணெயையை நேரடியாக ஸ்கால்ப்பில் தய்க்கவும். கூந்தலுக்கு வேண்டாம். வேர்கால்களில் மட்டும் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால்

தலைமுடியை அலசவும். உபயோகிக்கும் சில தடவைகளிலேயே முடி உதிர்தல் நின்று போவதை கண்கூடாக பார்ப்பீர்கள். 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake