
இந்த நாட்களில் பலரும் உடல் பருமனால் படாதபாடு படுகிறார்கள். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக தான் உடலில் தொப்பை கொழுப்பு (belly fat) மற்றும் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மேலும் அதை குறைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இயற்கை வழியில் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். இதற்கு நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா உதவும். அதுதான் இலவங்கப்பட்டை இது தொப்பை கொழுப்பை குறைத்து, எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை எவ்வாறு உதவுகிறது?
1. வளர்சிதை மாற்றம் துரிதப்படும்
இலவங்கப்பட்டையானது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஏனெனில் வளர்ச்சியை மாற்றம் வேகமாக இருக்கும் போது தான் கலோரிகள் வேகமாக எடுக்கப்படுகிறது. இதனால் எடை இழுப்பு செயல்முறையும் வேகமாக நடைபெறும். இதற்கு தினமும் வெறும் வயிற்றில் சூடான நீரில் சிறிதளவு லவங்கப்பட்டை கொடியை கலந்து குடித்து வந்தால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும் இதனால் கொழுப்பு விரைவாக குறைந்து எடை குறைய ஆரம்பிக்கும்.
2. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் :
எடை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பது. இலவங்கப்பட்டையானது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவும். இதற்கு தினமும் இலவங்கப்பட்டை நீர் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மேலும் உடலில் கொழுப்புகள் சேராது. அதுபோல தினமும் அரை ஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் பசி குறையும், எடையும் கட்டுக்குள் இருக்கும்.
3. தொப்பை கொழுப்பை குறைக்கும்
தொங்கும் தொப்பையால் பலரும் அவதிப்படுகிறார்கள். இதற்கு இலவங்கப்பட்டை உதவும். ஏனெனில், இதில் இருக்கும் தனிமங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தி, விரைவாக குறைக்கும். இதற்கு சூடான நீரில் சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை கலந்து இரவு தூங்கு முன் குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
4. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :
செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால் தான் எடையும் வேகமாக இழக்கப்படும். எப்படியெனில் செரிமானம் நன்றாக இருந்தால் மட்டுமே உணவானது விரைவில் ஜீரணமாகும். இதனால் உடலில் கொழுப்பு குவியாது. இலவங்கப்பட்டையானது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. இதற்கு லவங்கப்பட்டையில் டீ போட்டு குடிக்கலாம்.
5. அடிக்கடி சாப்பிடுவதை தடுக்கும் :
அடிக்கடி பசி எடுக்கும் போது சாப்பிட்டால் எடை அதிகரிப்பது கன்ஃபார்ம். இதை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டு உதவும். இலவங்கப்பட்டையில் இருக்கும் பண்புகள் வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைக்கும். இதற்கு தினமும் வெறும் வயிற்றில் காலையில் இலவங்கப்பட்டை நீர் குடிக்கலாம். இல்லையெனில் மாலை வேளையில் இலவங்கப்பட்டை டி குடிக்கலாம். இவை பசியை கட்டுப்படுத்தும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்க உதவும்.
பக்கவிளைவுகள் :
- இலவங்கப்பட்டையில் அதிக அளவு கு கூமரின் உள்ளதால் இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இலவங்கப்பட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
- இதை மிக அதிக அளவில் எடுத்துக் கொண்டால் குறிப்பாக சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், இது ரத்த சர்க்கரையை அதிகமாக குறைக்கும்.
- இலவங்கப்பட்டை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் இது வாய்ப்புண்களுக்கு வழிவகுக்கும்.
- எரிச்சல், இருமல் அல்லது நிமோனியாவை கூட ஏற்படுத்தும்.
முக்கிய குறிப்பு :
எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை உதவும் என்றாலும் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு உங்களது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.