நீங்கள் கேள்விப்பட்டிராத அம்மான் பச்சரிசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் இதோ...

 
Published : Jan 02, 2018, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
நீங்கள் கேள்விப்பட்டிராத அம்மான் பச்சரிசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் இதோ...

சுருக்கம்

Here are the medical qualities in Amman Prank that you have never heard of ...

அம்மான் பச்சரிசி

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், வெப்புத் தனிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்.

இலையைச் சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் தீரும்.

தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேலையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெருகும்.

இதன் பாலைத்தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்துப் பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!