
சாதிக்காய்
இயற்கை வைத்தியத்தில் சாதிக்காய்க்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் சாதிக்காய் அதிகம் விளைகிறது.
மலைச்சரிவுகளில் சாதிக்காய் மரங்கள் வளர்கின்றன. இந்த மரங்களில் மொத்தம் 80 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு வகை மரம் சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது.
பூக்கள் சிறியதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கும் நல்ல மணம் வீசும். ஆண்டுதோறும் பூத்துக்காய்க்கக் கூடியது சாதிக்காய் மரம்.
பேரிக்காய் அளவிற்கு இதன் பழம் இருக்கும். பழம் நன்றாக முற்றியபிறகு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
பழத்தின் வெளிப்புறத் தொலை உடைத்தால் உள்ளே செந்நிறத்தில் சதைப்பகுதி தெரியும். இந்த சதைப்பகுதிக்கு 'சாதிப்பத்திரி' என்று பெயர்.
கொட்டையையும், அதனுள் இருக்கும் பருப்பையும் தான் சாதிக்காய் என்கிறார்கள். சாதிக்காய் மட்டுமின்றி மரத்தில் உள்ள இலைகளையும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
சூயிங்கம், மசாலாப் பொருட்கள், பற்பசை, உடலில் பூசக்கூடிய எண்ணைகள் தயாரிப்பில் சாதிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சாதிக்காய் குழந்தைகளுக்கு பயன்படும் தலைசிறந்த மருத்துவப் பொருளாகத் திகழ்கிறது.
அஜீரணக்கோளாறு, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது.
இரத்தைத்தை சுத்தப்படுத்துவதில் சாதிக்காய்க்கு பெரும் பங்கு இருக்கிறது.
சாதிபத்திரி எனப்படும் சதைப்பகுதியை காய வைத்துப் பின்னர் பொடி செய்து உணவுப் பொருட்களுக்கு வாசனையூட்டப் பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலும் இவை பாக்குகளுடன் கலந்து தாம்பூல பொட்டலங்களாக தயாரிக்கிறார்கள்.
சாதிக்காய் சிறந்த நாட்டு மருந்து ஆகும்.