இந்த எட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும்...

 
Published : Jan 02, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
இந்த எட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும்...

சுருக்கம்

Eating these eight healthy foods will help you get rid of your liver ...

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஓன்று கல்லீரல். நாம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புசத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.

கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கும். 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆனால் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலைக் காக்கலாம். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் குணமாக்கலாம்.

1.. நெல்லிக்காய்: 

வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் சீராக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேணுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியகவும் சாப்பிடலாம்.

2.. ஆப்பிள் சீடர் வினிகர்: 

ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்கு முன்பும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்காலம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

3.. அதிமதுரம்: 

சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக அதிமதுரம் உள்ளது. இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்துளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டிக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இருமுறை குடிப்பது நல்லது.

4.. மஞ்சள் : 

தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாம் உடலுக்குப் பலப்பல் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்க்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

5.. பப்பாளி: 

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒர் அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது நல்ல பலன் கொடுக்கும்.

6.. கீரை, கேரட் ஜூஸ் : 

அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைக் தினமும் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் காணாமல் போகும்.

7.. அவகோடே, வால்நட் :  

கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் உள்ள குளுடதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

8.. ஆப்பிள், காய்கறிகள் : 

கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் பிதநீரைச் சீராகக் சுரக்க உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமானப் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!