
வல்லாரை கீரையை ஏரளாமாய் மக்கள் அன்றாட உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
வல்லாரையுடன் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் இவைகளுடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். சிறிதளவு புளி உப்பு ஒரு மிளகாய் வைத்து துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.
வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து தூளாக்கிக் கொண்டு காப்பித் தூளுக்குப் பதிலாக பாலில் இந்த தூளை இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் குடிக்கலாம்.
வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்கிறது. சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.
வல்லாரை இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள் கூட்டுவதோடு, இரத்தத்தின் திறனும் புரதத்தின் அளவும் கூட்டும். இரத்தத்தில் ஹிமோகுளோப்பின் அளவும் உயர்த்தும்.
வல்லாரை ஒரு மிக சிறந்த இரத்த விருத்தி மூலிகை. இது நரம்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
மூளைக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.
தலையிடி, தலை சோர்வு, மூளை அயர்ச்சி போன்றவைகளை இது குணமாக்குகிறது.
வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்று தின்றால் வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்து விடும்.