முடி அடர்த்தியாக வளர உதவும் மூலிகை எண்ணெய். வீட்டிலேயே தயாரித்து சூப்பர் பலனை அடையலாம்...

 
Published : Jan 31, 2018, 02:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
முடி அடர்த்தியாக வளர உதவும் மூலிகை எண்ணெய். வீட்டிலேயே தயாரித்து சூப்பர் பலனை அடையலாம்...

சுருக்கம்

Herbal oil that helps the hair grow densely. Getting ready at home and achieving super benefit ...

முடி அடர்த்தியாக வளர உதவும் மூலிகை எண்ணெய்

தேவையான பொருட்கள்
 
அனைத்து கீரைகளும் ஒரே அளவு

1. பொடுகுதலை கீரை

2. கரிசலாங்கண்ணி கீரை

3. கருவேப்பிலை

4. மருதாணி இலை

5. செம்பருத்திப்பூ

6. செம்பருத்தி இலை

7. வேப்பந்தலை

8. பொன்னாங்கன்னி கீரை

9. வெந்தயம் – உள்ளங்கை அளவு

10. நெல்லிக்காய் – ஒரு கீரையின் அளவு (கொட்டை நீக்கி)

11. தேங்காய் எண்ணெய்

செய்முறை 

பொடுகுதலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, வெப்பந்த்தலை பொன்னாங்கன்னி கீரை இவற்றின் இலைகளை மட்டும் பறித்துக்கொண்டு நன்றாக அலசி, சம பங்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  செம்பருதிப்பூவையும் அதே பங்கு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, மேற்கண்ட கீரை மற்றும் பூவுடன் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் போட்டு நன்றாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.  வேண்டும் என்றால் மிஞ்சிய சக்கயுடன் சிறிது நீர் விட்டு மீண்டும் அரைத்து இனொரு முறை பிழியலாம்.

பிழிந்த சாருடன் அதே அளவு தேங்காய் எண்ணை சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.  முதலில் நீர் இருப்பதால் சடசடப்பு வரும்.  பின்பு கரும் பச்சை நிறமாக மாறும். கிட்டத்தட்ட அரைமணி நேரம் காய எண்ணையாக மாறும். உடன் வெந்தயம் சேர்த்து சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.

ஆறிய உடன் தலையில் தேய்க்க ஆரம்பிக்கலாம். தினமும் தேய்த்து வர ஒரு மாதத்தில் நல்ல ரிசல்டை காண முடியும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?
Butter For Glowing Skin : தேவதை மாதிரி அழகில் மிளிர 'வெண்ணெயுடன்' இந்த '1' பொருள் சேர்த்து முகத்தில் தடவுங்க! நல்ல ரிசல்ட்