
நெல்லிக்காய்
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.
அத்திப்பழம்
அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும்.
மலச்சிக்கல் தீரும்.
ரத்த விருத்தி ஏற்படும்.
பித்தம் தணியும்.
வெள்ளைப் படுதலை தடுக்கும்.
ஆண்மையை பெருக்கும்.