பீதி கிளப்பும் H5N1 வைரஸ் பரவல்.. எச்சரிக்கும் குளோபல் வைரஸ் நெட்வொர்க்!! 

Published : May 07, 2025, 04:02 PM IST
பீதி கிளப்பும் H5N1 வைரஸ் பரவல்.. எச்சரிக்கும் குளோபல் வைரஸ் நெட்வொர்க்!! 

சுருக்கம்

குளோபல் வைரஸ் நெட்வொர்க் H5N1 வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

H5N1 Virus Spread: Global Virus Network Alert! குளோபல் வைரஸ் நெட்வொர்க் என்பது வைரஸ்களை குறித்து ஆய்வு செய்யும் வைரஸ் நிபுணர்களை கொண்ட குழுவாகும். இதில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வைரஸ் நிபுணர்கள் உள்ளனர். இக்குழு  H5N1 வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கைவிடுத்துள்ளது.இந்த வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகைதான். பேர்ட் ப்ளு (Bird Blue) (அ) ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) என்ற இந்த வைரஸ் பறவைகள், பாலூட்டிகளில் சுவாச நோய்த்தொற்றை உண்டாக்கும். இந்த வைரஸ்  மனிதர்களையும் பாதிக்கலாம். 

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கினால் நோய்த்தொற்றுகளுடன் இறப்பும் ஏற்படலாம்.  இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி, குடல் வலி ஆகியவை ஏற்படலாம். தற்போது அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், H5NI வைரஸ் குறித்து குளோபல் வைரஸ் நெட்வொர்க் உலக அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்கா நிலவரம்: 

இந்த வைரஸானது தற்போது அமெரிக்காவில் பசுக்களிலும், மனிதர்களுக்கும் கூட பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த தொற்றுநோய் இதுவரை 995 கறவை  மாடுகளுக்கும், மனிதர்களில் 70 பேருக்கும் பரவியுள்ளதாக  சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை! 

பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட இடம்பெயரும் இனங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. இவைகளிடம் இருந்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் வரலாம். ஆகவே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க