Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்

Published : Dec 08, 2025, 11:58 AM IST
exercises for joint pain

சுருக்கம்

மூட்டு வலியை குறைக்க உதவும் வீட்டிலேயே செய்ய கூடிய மிக எளிய பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டு வலி என்பது தற்போது எல்லா வயதினருக்கும் வரும் ஒரு பொதுவான வலிமிகுந்த பிரச்சனையாகும். வீக்கம், விறைப்பு ஆகியவற்றால் ஏற்படும் இந்த பிரச்சனையானது வயதிற்கு ஏற்ப மோசமாகலாம். முழங்கால் மூட்டு வலிக்கு சிகிச்சைகள் ஏதுமில்லை. ஆனால் அதை சில மருந்துகள், வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம். வீட்டிலேயே செய்யக் கூடிய அப்படிப்பட்ட பயிற்சிகள் என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டு வலியை குறைக்க உதவும் வீட்டிலேயே செய்ய கூடிய பயிற்சிகள் :

1. அமர்ந்த நிலையில் முழங்கால் நீட்டிப்பு!

இந்த பயிற்சியானது முழங்கால்களை தாங்கும் தசைகளை வலுப்படுத்தும். பிறகு காலப்போக்கில் மூட்டு வலியையும் குறைக்கும். இந்த பயிற்சி செய்வதற்கு ஒரு நாற்காலியில் நேராக நிமிர்ந்து உட்காருங்கள். பிறகு உங்களது ஒரு காலை இடுப்புக்கு சமமாக இருக்கும் வரை நேராக தூக்கவும். சிறிது நேரம் கழித்து காலை கீழே வைக்கவும். அடுத்ததாக மறு காலை அதேபோல நேராக தூக்கவும். இந்த பயிற்சி சிறியதாக தெரிந்தாலும் வலிமை மிக்கது. நாள் முழுவதும் முழங்கால்களை சீராக வைக்க உதவும்.

2. தொடை தசை நீட்சி :

இந்த பயிற்சி செய்வதற்கு தரையில் நேராக உட்கார்ந்து உங்களது ஒரு காலை நேராக நீட்டவும். மற்ற காலை மடக்கவும். பாதத்தின் அடிப்பாகத்தை நீட்டிய காலை உள் தொடையில் படும்படி வைக்க வேண்டும். உங்களது முதுகை நேராக வைக்கவும். நீட்டிய காலில் கால் விரல்களை நோக்கி மெதுவாக முன்னோக்கி குனியவும். தொடையின் பின்புறத்தில் இழுப்பதை உணரும் வரை நீட்டி, சில வினாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் மெதுவாக பழகிய நிலைக்கு திரும்ப வேண்டும்.

3. காலை நேராக தூக்குதல்!

இந்த பயிற்சி முழங்கால் மூட்டை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த பயிற்சி செய்வதற்கு தரையில் இருந்து கைகளை நீக்கி நேராக படித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு காலை மெதுவாக தரையில் இருந்து மேலே தூக்கவும். மற்றொரு காலை முழங்காலில் வளைத்து கொள்ளவும். மேலே தூக்கிய காலை சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு மீண்டும் கீழே இறக்கவும். அடுத்ததாக கால்களை மாற்றி மீண்டும் இதுபோல செய்யவும்.

4. பட்டாம்பூச்சி போஸ் :

இதற்கு தரையில் நிமிர்ந்து உட்காந்து முழங்கால்களை மடக்கி பாதங்களை தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்ட வைக்க வேண்டும். பாதங்களை இடுப்பு பகுதிக்கு அருகில் கொண்டு வர வேண்டும். பின் உங்கள் கைகளால் பாதங்களை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பட்டாம்பூச்சி இறக்கைகளை போல முழங்கால்களை மெதுவாக மேலும் கீழும் அசைக்க வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது மூச்சை சீராக வைத்திருக்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க