சிறுநீரக பாதை தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவும் உணவுகள்…

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
சிறுநீரக  பாதை தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவும் உணவுகள்…

சுருக்கம்

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதே. ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருக்கும்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட.

கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.

அ. காரட்

காரட் தினமும் பச்சையாக சாப்பிடுவது நல்லது.

காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது.

காரட் உங்கள் உடல்நலத்தை காக்கும் திறன் கொண்டது.

சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.

ஆ. தயிர்

தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும்.

இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும்.

இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.

இ. முள்ளங்கி

முள்ளங்கி அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake