உணவுகளை அலுமினியத் தாளில் சுற்றி வைக்கும் போது கவனிக்க வேண்டியவை..!!

By Dinesh TG  |  First Published Nov 18, 2022, 4:22 PM IST

ஏதாவது ஒரு பாத்திரத்தில் உணவு வகைகளை வைக்க வேண்டும். அது முடியாது என்றால், பாதிப்பு ஏற்படுத்தாத தாள்களில் உணவை பாதுகாப்பாக வைக்கலாம். இதற்கு பட்டர் பேட்டர் என்று சொல்லக்குடிய தாள்கள் பெரும் உதவியாக உள்ளன.
 


நீங்கள் சமைத்து சாப்பிட்டாலும் அல்லது உணவுகளை வெளியே வாங்கிவந்து சாப்பிட்டாலும், குறிப்பிட்ட சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் ஒன்று தான் உணவை பத்திரப்படுத்தி வைப்பது. பெரும்பாலானவர்கள் மிச்சமாகின்ற அல்லது வேண்டிய நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை பாத்திரங்களில் வைத்துவிடுகின்றனர். பொதுவாக சாப்பிடும் உணவுகளை சேமித்து வைக்கும் போது, பல்வேறு விஷயங்களை நினைவில் கொள்வது முக்கியம்.

உங்களுடைய காதல் வாழ்க்கை அதிரடியாக மாறுவதற்கு இதோ 5 வழிமுறைகள்..!!

Tap to resize

Latest Videos

அதில் ஏதேனும் தவறு நடந்தால், ஆரோக்கியத்துக்கு எதிர்மறையாகிவிடும். பலரும் பாத்திரங்கள், டப்பாக்களுக்கு பதிலாக உணவுகளை அலுமினியம் காகிதம் மூடுவதை அதிகம் பார்க்க முடிகிறது. பொதுவாக வெளியே பணியிடங்களுக்கு செல்பவர்கள், பயணம் மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் உணவுகளை பத்திரப்படுத்த அலுமினியம் தாள்களை பயன்படுத்துகின்றனர்.

இதுதொடர்பாக கருத்துக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அலுமினியம் தாள்களில் உணவை சேமித்து வைப்பது நல்லதல்ல என்கின்றனர். அலுமினியம் பாத்திரங்களில் உணவு சமைக்கப்படும் போது, ஏன் உணவுகளை அலுமினியம் தாள்களில் சேமித்து வைக்கக்கூடாது என்கிற கேள்வி எழலாம். ஆனால் அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைப்பது நல்லது அல்ல என்பது தான் உண்மை.

தினசரி உடலுக்கு அலுமினியம் மூலம் கிடைக்கும் சத்துக்கள் தேவைதான். ஆனால் அது அளவுடன் இருக்க வேண்டும். உடலுக்கு அளவுக்கு அதிகமாக அலுமினியம் மூலம் கிடைக்கும் சத்துக்கள் அதிகரித்தால், பல்வேறு வகையில் உடல்நலன் பாதிக்கப்படும். அந்த வகையில் அலுமினியத் தாள்கள் மூலம் சேமிக்கப்படும் உணவின் வாயிலாக, உலோகம் உடலுக்குள் செல்லக்கூடும். 

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க இதைச்செய்தால் போதும்..!!

அலுமினியத் தாளை சூடாக்குவதும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக அமில உணவுகள் மற்றும் காரமான உணவுகளால் அலுமினியத் தாள் சூடாகி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். முடிந்தவரை உடனடியாக சமைத்து வேறுப் பாத்திரங்களில் உணவுகளை மாற்றும் போது பெரிய பிரச்னையில்லை. ஆனால் உணவை அலுமினியம் பாத்திரங்களிலே விட்டுவைத்தால், உடல்நலன் பாதிக்கப்படும்.

அலுமினியத் தாளில் உணவைப் போடும்போது, ​​அதில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் விரைவில் உணவு கெட்டுவிடும். அதன் காரணமாக எஞ்சிய உணவுகளை அதில் வைப்பதை தவிருங்கள். உணவை முடிந்தவரை பாத்திரங்கள் அல்லது ஹாட்பாக்ஸில் வைக்கவும். பயணங்களின் போது சாப்பிட, அலுமினியம் தாள்களுக்கு பதிலாக பட்டர் பேப்பரை பயன்படுத்தலாம். அதனால் எந்த தீங்கும் கிடையாது.

click me!