இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அரிசி, ஓட்ஸ் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் பயன் தருகிறது
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய். இது நிலையற்ற இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் மற்றும் வழிகள் உள்ளன. ஆனால் நமது உணவுமுறையை மாற்றுவதன் மூலம், இந்த குறைபாட்டை எளிதில் நிவர்த்தி செய்துவிடலாம்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அரிசி, ஓட்ஸ் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற உணவுகளைச் சேர்க்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். கேழ்வரகில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. கேழ்வரகு சாப்பிடுவது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.
undefined
அதில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அத்தியாவசமான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மற்ற தானியங்களை விடவும் கேழ்வரகில் கால்ஷியம் அதிகளவுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு வலுவடையும் மற்றும் பற்கள் பலப்படும். கேழ்வரகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால் மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்னைகள் விரைவாக நீங்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றவும் இது உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சத்து மிகுந்தது. அரிசி மற்றும் கோதுமைக்கு இது ஒரு நல்ல மாற்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். டயட்டரி நார்ச்சத்து இருப்பதால் உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
திடீரென உடல் எடை கூடுகிறதா? அதற்கு தீர்வு இதுதான்..!!
நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமான உணவாக இல்லாமல், பல்வேறு பிரச்னைகளுக்கு வேண்டிய தீர்வு கேழ்வரகு மூலம் கிடைக்கிறது. சரும பராமரிப்புக்கு ராகியை அடிக்கடி சாப்பிடலாம். இதிலிருக்கும் மெத்தியோனைன் மற்றும் லைசின் போன்றவை சருமச் செல்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன்மூலம் நீங்கள் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்கலாம்.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து இருக்கிறது. இதை நமது உணவு முறையில் அவ்வப்போது எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகை பிரச்னையை குணப்படுத்தும். ஒற்றை தலைவலி, அமினோ அமிலங்கள் குறைபாடு, நைட்ரஜன் சமநிலை, தாய்பால் சுரப்பதில் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரிசெய்யும் பண்பு கேழ்வரகில் இடம்பெற்றுள்ளது.