தினமும் இரண்டு பேரீச்சம்பழம், இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் இவ்வளவு அற்புதல் உங்கள்  உடலில் நடக்கும்...

 
Published : Feb 26, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
தினமும் இரண்டு பேரீச்சம்பழம், இரண்டு வாரங்கள் சாப்பிட்டால் இவ்வளவு அற்புதல் உங்கள்  உடலில் நடக்கும்...

சுருக்கம்

Everyday two dates two weeks eating so much will happen in your body ..


தினமும் இரண்டு பேரீச்சம்பழம், இரண்டு வாரங்கள் சாப்பிட்டால்

பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை இரண்டு வாரங்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள்.. 

தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது.

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி