ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது... உஷார்...

Asianet News Tamil  
Published : Jun 29, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது... உஷார்...

சுருக்கம்

every six minutes stroke attack each person

நல்ல நேரம் சரி அதென்ன பொன்னான நேரம்.

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து,மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி,மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
மூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது,பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன.

இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.
தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம்,முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது.

பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.



தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது;கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும்.

இடையில் பாதிப்பு அதிகரித்தோ,குறைந்தோ காணப்படும்.
முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது.

இதிலும், இரண்டு வகைகள் உண்டு. 
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக் கசிவு பெரிய அளவில் இருந்தால்,பாதிப்பு கடுமையாக இருக்கும்.

பக்கவாதம் வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல்;செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு,திடீரென பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றல்,திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பிறர் பேசுவதை புரிய முடியாமை, 
திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே,உஷாராகி விடுவது நல்லது.

எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா?
உலகில், ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு, 10 பேர் இறக்கின்றனர்.

அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

 மூன்று மணி நேரம் 'பொன்னான நேரம்' 
என்கிறார்களே ஏன்?
அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும்.

மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (Thrombolitic therapy)செலுத்தினால், 
முற்றிலும் குணப்படுத்த முடியும்.தாமதமாக வந்தால், மருந்து போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான்,அந்த மூன்று மணி நேரத்தை, 
'பொன்னான நேரம்' என்கிறோம்.

தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லாருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது.

பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிடவேண்டும்.

கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல்,மன அழுத்தம் வராமல் பணிகளை 
எளிமைப்படுத்துதல் அவசியம்.பழம், கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை,கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?