
உடல் சூடு அதிகம் உள்ளோருக்கு, வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சூடு மேலும் அதிகரிக்கும். இதனால், வயிறு இழுத்து பிடித்தல், அடிவயிறு வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள் தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், எரிச்சல், சிவந்து போதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
நீரிழப்பு ஏற்படும் போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராதவர்களுக்கு கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
குறு மயக்கம் மற்றும் ஆழ்நிலை மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சிறுநீரை அடக்கி வைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி, தொற்று ஏற்பட்டு சிறுநீர் பாதையில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது
ஓட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு, வெப்ப சூழலில் அடிக்கடி உணவு நஞ்சாகும் வாய்ப்புகள் அதிகம். அதனால்,வயிற்றுப் போக்கால் அதிகம்
அவதிப்பட நேரிடும்.
கோடைக் காலத்தில் அந்த காய்ச்சலின் தாக்கம், அதிகமாக இருக்கும். தண்ணீர் மூலம் பரவும்
நோய் என்பதால், சற்று தீவிரமாக இருக்கும். அதற்கு வெளி உணவுகளை உண்ணாமல், வீட்டில் தயாரித்த உணவுகளை உண்டாலே போதும். சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றை தவிர்த்தாலே அந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.
தண்ணீர் மட்டுமல்லாமல், சூப், பழச்சாறு, மோர், இளநீர், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய், பழங்களை அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை சாறுகள் அதிகமாக குடிக்கலாம். வாரம் இருமுறை, எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளலாம்.
கோடைக் காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது; ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தவும் கூடாது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். 'டின்'களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம்,குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.