இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளை பாதாம்  தடுக்கிறது

 
Published : Jun 30, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளை பாதாம்  தடுக்கிறது

சுருக்கம்

bad ham solve heart problems

கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு நல்ல கொழுப்பு தேவை. வேலையும், கவலையும் அதிகம் என்றால் பாதாம் பருப்புகளையே தொடர்ந்து சாப்பிடலாம்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு உள்ளது. குளுட்டாமிக் அமிலமும் அதில் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

 


நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமானத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரம் தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும்கூட "டைப் 2' நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறது. பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் வரவே வராது.

பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய் உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?