
காய்கறிகளில் எளிமையான காய்கறி சுரைக்காய். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
1.. சுரைக்காய் பித்த தோஷத்தை சமனப்படுத்தும். பித்த தோஷத்தின் உட்பிரிவான ரஞ்சக பித்தம், கல்லீரல் மற்றும் ரத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.
2.. சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் பயன் தருபவை.
3.. இலையை பிழிந்து சாறு எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்க காமாலை குணமாகும்.
4.. கொடியை குடிநீரிலிட்டு வீக்கம், பெரு வயிறு, நீர்க்கட்டு இவற்றுக்கு கொடுப்பது வழக்கம்.
5,. தேள் கடிக்கு சுரைக்காய் விதையை அரைத்து கட்டினால் விஷம் இறங்கும்.
6.. சுரைக்காயின் சாற்றை நல்லெண்ணையுடன் கலந்து தலைக்கு தேய்க்க நல்ல தூக்கம் வரும்.
7.. சுரைக்காயின் சாற்றுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து பருக, சிறுநீரக கோளாறு தீரும்.