வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முட்டை தீர்வளிக்கும். எப்படி?

 
Published : Jul 11, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முட்டை தீர்வளிக்கும். எப்படி?

சுருக்கம்

Eggs will solve many problems at home. How?

முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

1.. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.

2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.

3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால் அந்த ஓட்டை குப்பைத் தொட்டியில் போடாமல் பூச்செடிக்கு உரமாக போடலாம்.

4. லெதர் பொருட்களை சுத்தம் செய்ய முட்டையின் வெள்ளைக் கரு மிகவும் சிறந்தது. சாதாரணமாக லெதரை சுத்தம் செய்ய கடைகளில் விற்கப்படும் பொருள் மிகவும் விலைமதிப்புடையது. ஆனால் அவ்வாறு அதனை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

5. முட்டையின் ஓட்டில் கூட சிறு செடிகளை வளர்க்கலாம். உதாரணமாக புல்லை வளர்க்கலாம். இல்லையெனில் செடிகளை வளர்க்க விதைகளை தோட்டத்தில் வைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து, வளர்த்து பின் அதனை பெரிய தொட்டிகளில் வளர்க்கலாம்.

6. முட்டை எப்போதும் வீட்டு பராமரிப்பிற்கு மட்டும் பயன்படுவதில்லை. ஒரு அலங்காரப் பொருளாகவும் பயன்படுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு “ஈஸ்டர் எக்” என்ற ஒன்றை அலங்கரித்து கொடுப்பது வழக்கம். ஆகவே அத்தகையவற்றிற்கு வீட்டிலேயே அவற்றை பயன்படுத்தலாம்.

7. முட்டையை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை இதுவரை கீழே தான் ஊற்றிவிடுவோம். ஆனால் முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறிது தண்ணீரில் வேக வைக்கும் போது சென்று விடும். ஆகவே அந்த நீரை கீழே ஊற்றாமல், செடிக்கு ஊற்றினால் செடிக்கு போதிய சத்துக்கள் கிடைத்து, செடியும் நன்கு வளரும்.

8. மெழுகுவர்த்தியை வீட்டில் ஏற்றும் போது, அதில் உள்ள மெழுகு உருகி வீணாக போகாமல் இருக்க, முட்டையின் ஓட்டில் அந்த மெழுகுவர்த்தியின் மெழுகை உருக்கி ஓட்டின் உள்ளே ஊற்றி, பின் அதனை ஒரு மெழுகுவர்த்தியாக பயன்படுத்தலாம்.

9. முட்டையின் ஓட்டை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தலாம். அதாவது முட்டையின் ஓட்டை சிறு துண்டுகளாக உடைத்து, அதில் பெயிண்ட் செய்து, அவற்றை வைத்து ஒரு மாடர்ன் ஆர்ட் போல் கற்பனைத் திறத்துடன் ஏதேனும் வரையலாம்.

10. முட்டையை வைத்து ஹேர் மாஸ்க் கூட செய்யலாம். ஆனால் முட்டையின் வெள்ளைக் கரு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் முட்டையை மற்ற பொருளுடன் கலந்து, ஃபேஸ் பேக் செய்து முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு