மழைக் காலம் என்றால் குழந்தைகள் மீது கூடுதல் கவனம்  தேவை...

 
Published : Jul 10, 2017, 07:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மழைக் காலம் என்றால் குழந்தைகள் மீது கூடுதல் கவனம்  தேவை...

சுருக்கம்

rainy season take care for child

மழைக் காலம் என்றால் குழந்தைகள் மீது கூடுதல் கவனம்  தேவை செலுத்த   வேண்டும். மழைக் காலத்தில் வைரஸ் ஜுரம் தாக்குதல் இருக்கும். வைரஸ் ஜுரம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் சில மருந்துகளைக் கொடுத்தே கட்டுப்படுத்த முடியும் என்பதால் சிகிச்சை மிக அவசியம். மழை காலத்தில் ஒருவித ஈரம் எல்லா இடத்திலும் இருக்கும். குளிர்ச்சியான தன்மை சருமத்தில் பாதிப்புகளை எற்படுத்துவதூடு உடல் நல பாதிப்புகளையும்  ஏற்படுத்தும். இப்பாதிப்பு  மற்றவர்க்கும் எளிதில் பரவும்.

படர் தாமரை

இது பூஞ்சை கிருமி பாதிப்பு வட்ட வடிவில் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு அதிகமாக இருக்கும், சிறு சிறு வட்டங்களாக ஆரம்பிக்கும். இது பின்னர் பெரிய பெரிய வட்டங்களாக பெரிதாகிப் பரவும். மற்றவர்களுக்கும் பரவும். குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர். வீட்டு செல்லப் பிராணிகளிடமிருந்து எளிதில் பரவும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய குளியல் சோப்பு, டவல், சீப்பு போன்ற பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

அதிகம் வியர்வை உடையவர்களும் இதனால் தாக்கப்படுவர். துணிகளை சுத்தமான சோப் கொண்டும், கிருமி நாசினி திரவங்கள் கொண்டும் சுத்தம் செய்வது நல்லது. உடல் ஈரமின்றியும், சுத்தமாகவும் எப்பொழுதும் இருக்க வேண்டும். சருமத்தை எரிச்சலாக்காத பருத்தி ஆடைகளே சிறந்தது. பாதிப்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நகங்களில் கிருமி :

மழை  காலத்தில் நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம் இந்நேரத்தில் எல்லா இடங்களிலும் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகள் இருக்கும். இக்கிருமிகள்  நகங்களின் வழியாக பரவக்கூடும்.  

மழைக் காலங்களில் அடிக்கடி ஏதாவது சாப்பிடச் சொல்லும். ஆனால் பசியில்லாமல் எதுவும் சாப்பிடாதீர்கள். உடனே அஜீரணம் ஏற்பட்டுவிடும். பொதுவில் மழை காலம் என்றாலே நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும் நாம் இந்நேரத்தில் பாதுகாப்பாக இல்லை என்றால் மழைக்கால நோய்கள்  தாக்கும்.

 

மழைக்கால நோய்கள்

* மலேரியா

* சரும பாதிப்பு

* டைபாய்டு

* வைரஸ் ஜீரம்.

* அதிக அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

* ஹெர்பல் டீ நன்கு எடுத்துக் கொள்ளலாம்.

* பச்சை காய்கறிகளை விட வேக வைத்த காய்கள் இக்காலத்தில் சிறந்தது.

* மழைக்கால நீர் சுகாதாரமின்றி இருக்க அநேக வாய்ப்புகள் உண்டு.

* மழையினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு அதிக ஆபத்தில் கொண்டு விடலாம்.

* நன்கு காய்ச்சிய வடிகட்டிய நீரை பயன்படுத்துங்கள்.

* அதிகபட்சம் ஆவியில் வெந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

PREV
click me!

Recommended Stories

Ragi Kanji : குளிர்காலத்தில் கட்டாயம் இந்த 'கஞ்சி' சாப்பிடனும்! நோஉ எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும்
Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?