புற்றுநோய் செல்களை முற்றிலும் அழிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…

Asianet News Tamil  
Published : May 09, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
புற்றுநோய் செல்களை முற்றிலும் அழிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…

சுருக்கம்

Eat these foods to completely destroy cancer cells ...

பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன.

நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

பூண்டு

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நட்ஸ்

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

பப்பாளி

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake